தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் யானை தாக்கி குடியிருப்பு காவலாளி உயிரிழப்பு - elephant attacked watchman

செட்டிபாளையம் அருகே ஒற்றை ஆண் யானை தாக்கி குடியிருப்பு காவலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பு
உயிரிழப்பு

By

Published : Jul 27, 2021, 3:46 PM IST

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகேயுள்ள மலை அடிவாரத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்கு இரவுநேர காவலாளியாகக் புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் பணியாற்றினார்.

நேற்றிரவு (ஜூலை 26) முத்துச்சாமி வழக்கமான காவல் பணியை முடித்துவிட்டு, இன்று (ஜூலை 27) காலை இயற்கை உபாதைக்காக குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியே சென்றிருந்தார்.

அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, முத்துச்சாமியைத் தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு (ஜூலை 26) அங்கு யானை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபடாததால், இவ்விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:யானை தாக்கி உயிரிழந்த நபரை 8 கிமீ நடந்தே தூக்கி வந்த உறவினர்கள்

ABOUT THE AUTHOR

...view details