தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இரவின் நிழல்' படத்தை திரையரங்கிற்குச்சென்று செவி வழியே கேட்டுணர்ந்த 70 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்!

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்துணர்வூட்டும் விதமாக திரைப்படத்திற்கு அழைத்துச்சென்று செவி வழியே காட்சிகளை உணரச்செய்த கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்களின் செயல் பலரிடையே பாராட்டைப்பெற்றுள்ளது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை திரைப்படத்திற்கு அழைத்துச்சென்று ஊக்கப்படுத்திய தன்னார்வலர்கள்!
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை திரைப்படத்திற்கு அழைத்துச்சென்று ஊக்கப்படுத்திய தன்னார்வலர்கள்!

By

Published : Jul 25, 2022, 6:49 PM IST

கோயம்புத்தூர்: கல்வி, விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கை என்ற கையை மட்டுமே ஊன்றி வாழ்வில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்துணர்வூட்டும் விதமாக சமீபத்தில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளி வந்த "இரவின் நிழல்" திரைப்படம் பலராலும் பேசப்பட்டு வருகிறது. சிலர் தரப்பில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் பலரது பாராட்டையும் பெற்றுவரும் இத்திரைப்படத்தினை பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஓசை வடிவில் செவி வழியே கேட்டு உணரும் வகையில் கோவையைச்சேர்ந்த ஸ்வதர்மா ஃபவுண்டேசன் மற்றும் அன்பகம் அறக்கட்டளை ஏற்பாடு செய்தது.

இதையடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 70 பேரை கோவை இடையர்பாளையம் பகுதியிலுள்ள தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள 'இரவின் நிழல்' திரைப்படத்திற்கு அழைத்துச்சென்றனர். இதன் முலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு புத்துணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்துப்பேசிய ஸ்வதர்மா பவுண்டேசன் அருணா கூறுகையில், 'சராசரி மனிதர்கள் வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல்களால் மன அழுத்தத்தில் உள்ள நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு புத்துணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக இந்த திரைப்படத்திற்கு அழைத்துச்சென்றதாக’ தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தும் செவி வழியே திரைப்படத்தில் இருந்த கருத்துகள் மற்றும் காட்சிகளை நன்கு புரிந்து கொண்டு உணர்ந்து கொண்டதாகவும் இதன் மூலம் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து திரைப்படம் பார்த்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, 'மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும் திரைத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், இது போன்ற திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கும்போது தாங்களும் சாதிக்க வேண்டுமென்ற புத்துணர்ச்சி பிறப்பதாகவும்' தெரிவித்தனர்.

செவி வழியே படத்தின் கதாபாத்திரங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துகளும் நன்கு புரிந்ததாகவும், பல்வேறு தனித்திறன்களை கொண்டுள்ள தங்களைப்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த நிகழ்வு மிகுந்த ஆக்கத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தன்னார்வலர்களுக்கு நன்றியையும் கூறினர். இயலாதவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பணம் கொடுத்து தான் உதவ வேண்டுமென்பது அல்ல; அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் நாமும் நம் கையை ஊன்றி அவர்களுக்கு ஒரு ஊன்றுகோலாக இருப்போமே.

'இரவின் நிழல்' படத்தை திரையரங்கிற்குச்சென்று செவி வழியே கேட்டுணர்ந்த 70 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்!

பார்வையில்லாமல் இருந்தாலும் செவி வழியே அவர்களின் மனக்கண்களை திறந்த தன்னார்வலர்களும் பாராட்டுக்குரியவர்களே...!

இதையும் படிங்க:கண்­களைக் கட்­டிக்­கொண்டு சிலம்பம் சுற்றிய சிறுவர்கள்: நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details