தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 29, 2023, 12:44 PM IST

ETV Bharat / state

பொள்ளாச்சியில் மினி மாரத்தான் போட்டி

பொள்ளாச்சியில் விவேகானந்தரின் 160ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

மினி மாரத்தான் போட்டி
மினி மாரத்தான் போட்டி

மினி மாரத்தான் போட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில், ஆழம் விழுது தன்னார்வ அமைப்பு மற்றும் சுவாமி விவேகானந்தா ரத்ததான குழு, ரோட்டரி கிளப் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மினி மாரத்தான் போட்டி 5 பிரிவுகளாக கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் இருந்து இன்று காலை தொடங்கியது.

இந்த போட்டியை பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் போட்டியானது 5 வயது முதல் 10 வயது வரை உள்ளவர்களுக்கு 2 கிலோமீட்டர் தூரமும், 11 வயது முதல் 13 வயது வரை உள்ளவர்களுக்கு 4 கிலோ மீட்டர் தூரமும், 14 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு 6 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது.

ஆண்கள் பொது பிரிவில் 12 கிலோமீட்டர் தூரமும், பெண்கள் பொது பிரிவில் 8 கிலோமீட்டர் தூரமும் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலில் வந்த 5 நபர்களுக்கு பதக்கங்களும், பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்

இதையும் படிங்க:ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த இங்கிலாந்து பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details