கரோனா தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
கோவை மாநகராட்சியில் பணியாற்றி ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, இன்று முதல்கட்டமாக மாநகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
சுகாதாரப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர் வேலுமணி தகுந்த இடைவெளியைப் பின்பற்றி சுகாதாரப் பணியாளர்கள் நிவாரணப் பொருள்களை வாங்கிச் சென்றனர். நிகழ்வில் பேசிய அமைச்சர், அதிமுக அரசு மக்களுக்கான அரசு என்றும்; இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவர்கள் ஆகியோருக்கு அதிமுக அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது, விஷ்வா சாந்தி அறக்கட்டளை மூலம் கேரள நடிகர் மோகன்லால் அளித்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள N95 முகக்கவசங்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், அவருக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:செல்போன் டவர் பாகங்கள் திருட முயற்சி - இருவர் கைது!