கோயம்புத்தூரில் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், இந்து அமைப்பினர் பலரும் சாலைகளில் தமிழ் கடவுள் என்று கூறப்படும் முருகன் கையில் வைத்திருக்கும் வேலை வரைந்தனர். இதற்கு இந்து அமைப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சாலையில் வரையப்பட்ட முருகன் வேல் - கற்பூரம் ஏற்றி வணங்கிய மூதாட்டி
கோயம்புத்தூர்: சாலையில் வரையப்பட்ட முருகனின் வேலை பார்த்ததும் மூதாட்டி ஒருவர் கற்பூரம் ஏற்றி வணங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
god pray
இந்நிலையில், கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள உருமாண்டம் பாளையத்தின் சாலையில், முருகனின் வேல் வரையப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற மூதாட்டி ஒருவர், வேலை பார்த்ததும் கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த காணொலி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:'ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் மாஸ்க் வழங்கப்படும்' - அமைச்சர் காமராஜ்