பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை அருகே உள்ள கோட்டூர் பகுதியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பெரும்பாலும் தினசரி கூலிவேலைக்குச் செல்பவர்கள். இதனால் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இப்பகுதி மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞர்களிடம் இருந்து மொபைல்போனை பிடுங்கச் சென்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கையிலிருந்து மொபைல்போனை பறித்துச் சென்ற திருடர்கள் இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து கோட்டூர் காவல் துறையினர் மொபைல்போன் திருடர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: வட்டாட்சியரை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்த இளைஞர் கைது