தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்! - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே பல ஆண்டுகள் ஆகியும் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறாத நிலையில், அரசைக் கண்டித்து வருகின்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர்
தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர்

By

Published : Dec 2, 2019, 3:53 PM IST

Updated : Dec 2, 2019, 4:44 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள கா.க.புதூரில் பல ஆண்டுகளாகியும் சமுதாய நலக்கூட பணிகள் நடைபெறாத நிலையில், வருகின்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதைத் தெரிவிக்க தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் கா.சு.நாகராசன்; ' கா.க.புதூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 54 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு, தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டிருந்தது.

ஆனால், அதற்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனிநபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு ஆளும் அதிமுகவைச் சேர்ந்த ஒரு பிரிவினர் ஆதரவு அளிக்கின்றனர். இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் வீட்டிற்கே சென்று கோரிக்கை அளிக்க முயன்றபோது, இது குறித்து ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும்' என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர்

ஆனால், இது வரை மாவட்ட ஆட்சியர் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதால் பொது மக்கள் அனைவரும், வரும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.

இப்படி மக்களின் வாழ்கையில் விளையாடும் அரசையும் அரசு அலுவலர்களையும் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிப்பு செய்வதாக பொதுமக்கள் சார்பாகவும் அனைத்துக் கட்சியின் சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் தெரிவிப்பதாகக் கூறினர்.

இதையும் படிங்க: ’சாலை வசதி ஏற்படுத்தாவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம்’

Last Updated : Dec 2, 2019, 4:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details