தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் விடியவிடிய திருவிழா: கிராமிய கலைகளை வளர்க்கும் கிராமம் - கிராமிய கலைகளை வளர்க்கும் கிராமம்

கோவை: காளப்பட்டியில் கிராமிய கலைகளை வளர்க்கும் வகையில், விடியவிடிய திருவிழா நடைபெற்றது.

kovai-village-festival
kovai-village-festival

By

Published : Mar 1, 2020, 3:33 PM IST

கோவை மாவட்டம் காளப்பட்டியில், கிராம கலாசாரத்தை பறைசாற்றும் வகையிலும் இளைய சமுதாயத்தினர் கிராமிய கலைகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் இரவு முழுவதும் திருவிழா கொண்டாடப்பட்டது.

அந்த விழாவில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில், சிம்மக்குரல் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம் அரங்கேற்றப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், “நமது கிராமிய கலைகளை தற்போதைய சமுதாயம் தெரிந்துகொள்ளவும், அதனை மாணவர்கள், இளைஞர்கள் வளர்க்கவும் இவ்விழா நடைபெறுகிறது” என்றனர்.

மேலும் அதில் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தமிழ் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டத்தை ஆடி மக்களிடையே சிறப்பான வரவேற்பு பெற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கோவையில் விடியவிடிய திருவிழா

இதையும் படிங்க:எருது விடும் விழாவில் துள்ளிக்குதித்து ஓடிய காளைகள்!

ABOUT THE AUTHOR

...view details