ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சோதனை - பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடைபெறும் நிலையில், அவரது ஆதரவாளர் என கூறப்படும் பெண் காவல் ஆய்வாளர் சந்திரகாந்தா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சோதனை
பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சோதனை
author img

By

Published : Mar 15, 2022, 11:45 AM IST

கோயம்புத்தூர்: அன்னூர் அடுத்த கணேசபுரத்தில் வசிப்பவர் சந்திரகாந்தா. இவர் திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இவர் மேல் ஏற்கனவே லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ளது. மேலும், இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் என கூறப்படுகிறது.

இவரது வீட்டில் இன்று (மார்ச் 15) லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ரேகா தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்த சோதனை மாலை வரை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை காரணமாக வெளியாள்கள் யாரையும் வீட்டினுள் அனுமதிக்காத வகையில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனையை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களை அவரது தந்தையும், அதிமுக பிரமுகருமான அன்புராஜ் தகாத வார்த்தைகளால் பேசியதால் அங்கு சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க:எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

ABOUT THE AUTHOR

...view details