கோவை வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையர் ரவிக்குமார். இவர் பணியின்போது லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அலுவலர் கைது - திடீர் சோதனையில் சிக்கினார்
கோவை: கோவை வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மாநகராட்சி உதவி ஆணையர் வசமாக சிக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணபதி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் வீட்டு வரி தொடர்பான நகல் வழங்கிட 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது உதவி ஆணையர் ரவிக்குமார் கையும் களவுமாக பிடிபட்டார். இவருக்கு உதவியாக இருந்த இடைத்தரகர் குணசேகரன் என்பவரும் சிக்கியுள்ளார்.
இதையடுத்து, இருவரிடமும் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், இருவரையும் கைது செய்தனர்.