தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலுமணியின் வங்கி லாக்கர் சோதனை

வேலுமணியின் வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

spv
spv

By

Published : Sep 4, 2021, 6:56 AM IST

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்லத்தில் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவியைக் கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் வங்கியில் சோதனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேலுமணிக்குத் தொடர்புடைய 60 இடங்களில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

வேலுமணி இல்லம், அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார், பொறியாளர் சந்திரபிரகாஷ், மாநகராட்சித் தலைமைப் பொறியாளர் லட்சுமணன் ஆகியோரின் இல்லங்கள், மேலும் மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர் காந்திமதி இல்லம், உதவிப் பொறியாளர் சரவணன் இல்லம், உதவிப் பொறியாளர் ரவி இல்லம் உள்ளிட்ட 60-க்கு மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

இதில் கணக்கில் வராத பணம், ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வேலுமணியின் சுகுணாபுரம் இல்லத்தில் 12 மணிநேரம் சோதனை முடிவில் அவருடைய வீட்டிலிருந்து வங்கி லாக்கர் சாவி ஒன்றை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து வந்த குழு எஸ்.பி. வேலுமணி கணக்கு வைத்துள்ள வங்கியின் லாக்கரைத் திறந்து சோதனை நடத்தியுள்ளனர். மேலும் வங்கி அலுவலர்களிடம் கடைசியாக எப்போது லாக்கர் திறக்கப்பட்டது, பின்னர் வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களைப் பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details