கோவை பாப்பம்பட்டி பிரிவைச் சேர்ந்த குமார்-சுமத்ரா தம்பதியின் மகன் ஷரிஷ். இவர் காரமடை பகுதியில் உள்ள வித்யா விகாஸ் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் மாணவன் நேற்று மாலை பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பள்ளிக்குச் சென்ற பெற்றோர், உறவினர்கள் மாணவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, முறையான விசாரணை செய்யக்கோரி மாணவனின் பெற்றோர், உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.