தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அட்டப்பாடி பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்த யானை வீடியோ! - அட்டப்பாடி

அட்டப்பாடியில் நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மற்றும் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை கொம்பன் யானையால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

அட்டப்பாடி பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்த யானை வீடியோ
அட்டப்பாடி பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்த யானை வீடியோ

By

Published : Feb 14, 2023, 9:38 AM IST

அட்டப்பாடி பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்த யானை வீடியோ

கோவை: அட்டப்பாடி பகுதி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்ட இந்த பகுதியில் யானை, புலி, காட்டெருமை, சிறுத்தை, உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. பவானி ஆற்றுப்படுகையில் இருப்பதால் இந்த பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும்.

இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் கொம்பன் யானை அட்டப்பாடியிலிருந்து மன்னார்காடு செல்லக்கூடிய மலைப் பாதையில் உலா வந்தது. மேலும் மன்னார்காடு பகுதியிலிருந்து அட்டப்பாடி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸை மறித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிறிது தூரம் பின்நோக்கி இயக்கினார். பின்னர் யானை சென்றவுடன் நோயாளியை அழைத்துச் சென்றார்.

அதேபோல் மன்னார்காட்டில் இருந்து ஆனைகட்டிக்கு வந்த அரசு பேருந்த அந்த யானை மறித்ததால் சிறிது நேரம் அங்கேயே பேருந்து நிறுத்தப்பட்டது. மேலும் இதே போன்று ஏராளமான வாகனங்களை யானை மறித்ததால் ஆனைக்கட்டி மன்னார்காடு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒற்றைக் கொம்பன் யானை அட்டப்பாடி பகுதியில் சுற்றி வருவதாகவும், காலை மாலை நேரங்களில் பிரதான சாலையில் இந்த யானை உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டிய சூழல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மருதமலை படிக்கட்டில் முகாமிட்ட காட்டு யானைக் கூட்டம் - விரட்டியடித்த வனத்துறை

ABOUT THE AUTHOR

...view details