தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி மன்றத் தலைவர் மீது ஊழல் புகாரளித்த துணைத் தலைவர்! - மாவட்ட ஆட்சியரிடன் மனு

கோவை: பொள்ளாச்சி அடுத்த சீ.மலையாண்டிபட்டிணம் ஊராட்சி மன்றத் தலைவர் மீது, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊழல் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vice President complains of corruption against Panchayat President
Vice President complains of corruption against Panchayat President

By

Published : Nov 20, 2020, 8:13 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சிக்குள்பட்ட சீ.மலையாண்டிபட்டிணத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மயில்சாமி ஊராட்சி மன்றத் தலைவராகவும், பாஜக சார்பில் போட்டியிட்ட ரவி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர் மயில்சாமி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், பாலங்கள், கரோனா கிருமிநாசினி தெளிப்பது, குடிநீர் தொட்டி பராமரிப்பது போன்றவற்றில் ஊழல் செய்துள்ளதாகவும் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.

அவருடன் சீ.மலையாண்டிபட்டிணம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, அன்புச்செல்வி, வெற்றி வேல்முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிடில், கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட உள்ளதாகவும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள்தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details