தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலா ஒரு கையில், லேண்டர் மறுகையில்.. இது சந்திரயான் பிள்ளையார்..! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

Chandrayaan vinayakar statue :சந்திராயன் -3 நிலவில் வெற்றிகரமாக தரையிரங்க வெற்றி சந்திரயான் விநாயகரை வடிவமைத்த கோவையை சார்ந்த தங்க நகை வடிவமைப்பாளர்

கோவையில் சந்திராயன்-3 வெற்றிக்காக வடிவமைக்கப்பட்ட வெற்றி சந்திரயான் விநாயகர் சிலை!
கோவையில் சந்திராயன்-3 வெற்றிக்காக வடிவமைக்கப்பட்ட வெற்றி சந்திரயான் விநாயகர் சிலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 5:43 PM IST

கோவையில் சந்திராயன்-3 வெற்றிக்காக வடிவமைக்கப்பட்ட வெற்றி சந்திரயான் விநாயகர் சிலை!

கோயம்புத்தூர்: குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யு.எம்.டி.ராஜா. இவர், தனியார் நிறுவனத்தில் தங்க நகை வடிவமைப்பாளராகப் பணி புரிந்து வருகிறார். மைக்ரோ அளவில், ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகுந்தவர். இதன் காரணமாக மிக சிறிய அளவிலான தங்கத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களின் உருவங்கள் அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள் உருவங்களை வடிவமைத்து பாராட்டுகளை பெற்றுள்ளார்.

மேலும் முட்டை, அரிசி ,தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களிலும் தலைவர்களின் ஓவியங்களையும் விழிப்புணர்வு ஓவியங்களையும் வரைந்து வருகிறார். இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம், கடந்த மாதம் ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

தற்போது நிலவுக்கு மிகவும் நெருக்கமான சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 லேண்டர் உள்ளது. இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6 மணியளவில் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் நாடே சந்திராயன் -3 வெற்றியாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சந்திரயான்-3 லேண்டர் வெற்றி செய்திக்காக விநாயகர் சிலையை யு எம் டி ராஜா வடிவமைத்துள்ளார். சந்திராயன் இன்று நிலவில் இறங்க உள்ள நிலையில் நமது விஞ்ஞானிகளின் உழைப்பிற்கு வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காக இந்துக்களின் முதல் கடவுளான விநாயகரை வடிவமைத்து உள்ளார்.

இதையும் படிங்க:சந்திரயான் -3: நிலவின் மேற்பரப்பில் லேண்டர், ரோவரின் பணி என்ன?

விநாயகர் சிலையில் உள்ள நான்கு கைகளில், ஒரு கையில் சந்திரனும் , மற்றொரு கையில் சந்திரயான் 3 விண்கலமும், மற்ற இரண்டு கைகளில் ஒன்றில் இந்திய தேசியக்கொடியும், ஒரு கை ஆசிர்வாதம் செய்வது போன்றும் வடிவமைத்துள்ளார். இது குறித்து யு எம் டி ராஜா கூறுகையில், சந்திரயான் -3 நிலவில் வெற்றிகரமாக தரையிரங்க வேண்டும் என்பதற்காக இதை வடிவமைத்து உள்ளேன். இதற்கு சந்திரயான் சதுர்த்தி எனப்பெயரிட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் களிமண்ணை கொண்டு வடிவமைத்ததாகவும் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகள் சந்திராயன் தரை இறங்குவதை ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் தன்னுடைய பங்கிற்காக இதை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

பென்சில் முனையில் 50 மி.லி கிராம் தங்கத்தை கொண்டு கண்ணகி சிலையை வடிவமைத்து அசத்தி உள்ளார் ராஜா, அதோடு பென்சில் முனையிலேயே திருவள்ளுவர்,பெரியார் உருவங்களையும் செதுக்கி உள்ளார். இந்தியாவின் "முதல்பெண் குடியரசுத்தலைவராக, பிரதீபா பாட்டீல் பதவியேற்ற போது , அவரின் உருவப்படத்தை கலைஞரின் கவிதைகளாலே வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"சந்திரயான்-3 திட்டமிட்டபடி தரையிறங்கும்.. ஒத்திவைப்புக்கு வாய்ப்பில்லை" - இஸ்ரோ தலைவர் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details