மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டு தோறும் விழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு விழா ஆதி யோகி சிலை முன்பு நடந்தது. விழாவில், துணை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தார்.
விழாவில் மஹா சிவராத்திரி குறித்து நாயுடு சிறப்புரையாற்றினார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்புரை அப்போது, இந்த நாள் சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் நாள். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கங்கள், பண்டைய காலம் முதலே இந்த நாடு ஒரே கலாசாரம் கொண்டதாக இருந்தது என்பதை நமக்கு காட்டுகின்றன.
இதுபோன்ற விழாக்கள் இளைஞர்கள் மத்தியில் நமது கலாசாரத்தை கொண்டுச் செல்ல நல்ல வாய்ப்பாக உள்ளன.
இந்த விழாவை மிகப்பெரிய அளவில் விழா நடத்தும் சத்குருவின் பணி பாராட்டுக்குரியது. உலக மக்களுக்கு மகிழ்ச்சி தேவை.
பொருள் மட்டும் ஒருவருக்கு மகிழ்ச்சியை தராது. இதற்கு தீர்வாகத்தான் ஆதியோகி, யோகக் கலையை நமக்கு சொல்லி சென்றிருக்கிறார்.
யோகா என்பது கலை, அறிவியல், அமைதி, செல்வம். யோகா என்பது பழங்கால கலை. பன்னெடுங்காலத்துக்கு முன் இருந்தே இருந்து வருகிறது.
பிரதமர் மோடி அதை ஐ.நா சபை மூலம் உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினார். மோடிக்காக அல்ல, உங்கள் பாடிக்காக யோகா செய்யுங்கள்.
யோகாவின் அறிவியல் பலன் காரணமாகவே ஐ.நா அதை ஏற்று அங்கீகரித்தது. சர்வதேச யோகா தினமும் அறிவிக்கப்பட்டது.
அதன் மூலம் உடல் நலம் மட்டுமின்றி வளமும் பெறலாம். இவ்விழாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் - வெங்கையா நாயுடு