தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு ஆயிரத்து 385 மாணவர்களுக்கு, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மேற்படிப்புக்களுக்கான பட்டங்களை வழங்கினார்.
பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பேசிய அவர், "கடந்த ஆண்டில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு, 59 லட்சம் ஹெக்டேராக கூடுதலாக அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் 144.52 மில்லியன் டன்னாக உணவு தானிய உற்பத்தி உயர்ந்துள்ளது. கடந்த 2019– 20ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 143.38 மில்லியன் டன்னாக இருந்தது.
தமிழ்நாட்டில் நவீன தொழில்நுட்பம்
வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா பெருகி வரும் மக்கள் தொகை நகரமயமாக்கல், புவி வெப்பமடைதல், மழை குறைவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவசாயத்தை பாதிக்கிறது. நிலத்தடி நீர் மாசடைகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மாசடைவது அதிகரித்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வறட்சியை எதிர்க்கொள்ளும் விதை, நீர் சேமிப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகியவை அவசியமாகும்.
புதிய பயிர் வகைகளை ஏற்கும் விவசாயிகள்
2019ஆம் ஆண்டு நீர் மேலாண்மைக்கான 'ஜல்சக்தி' விருதை கடந்த நவம்பர் 14ஆம் தேதி வழங்கினேன். விவசாயத்துறையில் பல புதிய யுக்திகள் மற்றும் பல புதிய பயிர் ரகங்களை தமிழ்நாடு விவசாயிகள் ஏற்றுக்கொள்வது சிறப்பானதாகும். விவசாயத்துறையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள மரபணு தொகுப்பு அதிக விளைச்சலை அளிக்கும். புதிய பயிர் ரகங்கள் தான் சவால்களை எதிர்கொள்ளும். தமிழ்நாடு வேளாண் பல்கலை, அதற்கான ஆராய்ச்சிப்பணிகளை தொய்வின்றி செய்து வருகிறது.
மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும்
வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா புதிய தொழில்நுட்பம் மற்றும் மரபணு ஆராய்ச்சி காரணமாக விவசாய உற்பத்தி 30 விழுக்காடு உயர்ந்து செலவு 20 விழுக்காடாக குறைந்துள்ளது. எதிர்காலத்தில் வரும் சவால்களை எதிர்கொள்ள சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்துவது, நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதே சிறந்ததாகும். பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் புதிய தொழில் நுட்பத்திற்காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். கரோனா பாதிப்பு மாணவர்களின் முன்னேற்றத்தை எந்த சூழலிலும் தடுத்துவிடக் கூடாது. புதிய சவால்களை எதிர்கொண்டு மாணவ மாணவிகள் சாதனை படைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:மோடியின் தாடிதான் வளர்கிறதே தவிர பொருளாதாரம் வளரவில்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன்!