தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“திமுக, காங்கிரஸ் மதவாத அரசியலை செய்து வருகிறது” - வேலூர் இப்ராஹிம் - இந்தியா பாகிஸ்தான் போட்டி

Vellore Ibrahim: சுக்ரியா மோடி திட்டத்தின் கீழ் பயனடைந்த சிறுபான்மையினருக்கு சிறப்பு பரிசு அளிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனு அளித்து உள்ளார்.

coimbatore news
வேலூர் இப்ராஹிம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 8:39 AM IST

கோயம்புத்தூர்: சுக்ரியா மோடி திட்டத்தின் கீழ் பயனடைந்த சிறுபான்மையினருக்கு சிறப்பு பரிசு அளிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனு அளித்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் பயனடைந்த சிறுபான்மையினருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் சிறுபான்மையினர் அணிக்கு விழிப்புணர்வு செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டி மனு அளித்ததாகக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “கோவையில் மத்திய அரசின் நலத்திட்டதில் 31 சதவீத கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பயன் அடைந்து உள்ளார்கள். இஸ்லாமியர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவதை விட, பயங்கரவாத சக்திகளுக்கு கட்டுப்பட்டு தவறான பாதைக்குச் செல்வது அதிகமாக உள்ளது.

அந்த நிலையை மாற்றி பொருளாதாரத்திலும், கல்வியிலும் தன்னிறைவு பெற்றவர்களாக இஸ்லாமியர்கள் முன் வர வேண்டும். அதற்காக பல இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியரின் கீழ் உள்ள அதிகாரிகள், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளேன்.

பட்டியலை மாவட்ட ஆட்சியர் தரவில்லை என்றால், பாஜக சிறுபான்மை அணி சார்பாக போராட்டம் நடைபெறும். இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சையைத் தூண்டி பிரிவினைவாதத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரிவினைவாதத்தை உண்டாக்க திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகிறது. இவர்களால் ஊழலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சியின் முன்னேற்றத்தைப் பற்றி பேச முடியாது. குடும்ப அரசியலை செய்து கொண்டு, கொள்ளையடிக்க கூடிய கூட்டு கும்பல்தான் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி.

கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு இந்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்வதும், இஸ்லாமியர்கள் அல்லாஹு அக்பர் சொல்வதும், கிறிஸ்தவர்கள் Praise The Lord சொல்வது வழக்கம். அந்தந்த மதத்திற்கு ஏற்ப தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனை வைத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மதவாத அரசியலாக செய்து வருகிறது.

தேசத்தின் பண்பாடு மற்றும் கலாசாரத்தைத்தான் நாம் ஒருங்கிணைக்க வேண்டுமே தவிர, இது போன்ற சிறிய விஷயங்களில் பிரிவினையை உண்டாக்குவது யாராக இருந்தாலும் நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் தொழுதார்கள். இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு 5 முறை அல்லாஹு அக்பர் என்று தொழுது வருகிறார்கள். அதற்கு இந்துகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்திய தேசத்தில் அனைத்து மதங்களும் உண்டு. கும்பிடும் கடவுள் வழிமுறைகள் வேறு வேறாக இருக்கலாம்.

திருமாவளனை அயோக்கியன் என்று சொல்வதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். திமுக, இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. இஸ்லாமியர்கள், திமுக ஏமாற்றுவதை உணர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:“ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது?” - தமிழ்நாடு அரசு வாதம்

ABOUT THE AUTHOR

...view details