தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதி இல்லாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அனுமதி பெறாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் ராசாமணி
ஆட்சியர் ராசாமணி

By

Published : Jun 21, 2020, 1:34 PM IST

கோவையில் கரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையான கருமத்தம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, இ-பாஸ் இல்லாமல் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வரும் எந்த ஒரு வாகனத்தையும் அனுமதிக்கக்கூடாது என பணியில் இருந்த அலுவலர்களிடம் அறிவுறுத்திய ஆட்சியர், சோதனைச்சாவடி வழியாக வந்த சில வாகனங்களைத் தாமே ஆய்வும் செய்தார்.

அப்போது, அரசு வழிகாட்டுதல்களை மீறும் விதமாக ஏராளமான பயணிகளுடன் வந்த தனியார் பேருந்தைப் பார்த்த ஆட்சியர், அதன் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரைக் கடுமையாக கடிந்து கொண்டதுடன், பேருந்தை உடனடியாக பறிமுதல் செய்யும்படியும் உத்திரவிட்டார்.

இதையும் படிங்க:பெரியகுளத்தில் இன்றுமுதல் காலவரையறையின்றி முழு ஊரடங்கு!

ABOUT THE AUTHOR

...view details