தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேதா இல்லம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன் - pollachi jeyaraman

கோயம்புத்தூர்: சட்டப் போராட்டத்தின் மூலம் நிச்சயமாக வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்படும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்தார்.

vedha house
vedha house

By

Published : Aug 11, 2020, 9:10 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியில் முதியோருக்கான உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 53 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 27 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கினார்.

வேதா இல்லம் சட்டப்படி மீட்போம்

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "சட்டப் போராட்டத்தை முதலமைச்சர் வென்று வேதா இல்லத்தை நிச்சயமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றப்படும்" என்றார்.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details