கோவை:தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் முப்பெரும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா மற்றும் சனாதள எதிர்ப்பு பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கிருஷ்ணகிரி மாவட்டம் அருணபதியில் ஆவண கொலையில் இரண்டு பேர் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது தாய், மகன் தூங்கும் பொழுது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாதி மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இதில் காயம் அடைந்த அனுசியா என்ற தலித் பெண் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஆணவ கொலையை கண்டிக்கிற வகையிலும், ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிற வகையிலும், வருகின்ற 22 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் இனத்திற்கான பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறுவது அபத்தமானது. இது இந்திய ஒன்றிய அரசுக்கான கோரிக்கை. தமிழ்நாடு அரசு அந்த கோரிக்கையை ஆதரிக்கிறது அவ்வளவு தான். முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இந்திய ஒன்றிய அரசு தான் உள்ளது. டெல்லியில் இருப்பவர்கள் தான் அதில் முடிவெடுக்க முடியும். இது நீண்ட நாள் கோரிக்கை. பல மாநிலங்களில் அரசு இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நான்கு மாநிலங்களில் அப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தற்போது தமிழ்நாடும் அதை பின்பற்றி இருக்கிறது அவ்வளவு தான். இதில் தேர்தல் வாக்குவங்கி அடிப்படையில் எந்த அனுகுமுறையும் இல்லை. மதம் மாறியவர்களில் ஒரு பாகுபாடு நிலவுகிறது. பவுத்தம் மாறினால் இட ஒதுக்கீடு உண்டு, சமனம் மாறினால் இட ஒதுக்கீடு உண்டு, கிரிஸ்தவம், இஸ்லாம் மாறினால் இடஒதுக்கீடு இல்லை என்பது ஒரு பாகுபாடு. அதற்கு அவர்கள் சொல்லுகிற விளக்கம் இஸ்லாமும், கிரிஸ்தவமும் அந்நிய நாட்டு மதங்கள். அதை ஏற்க முடியாது என்று சொல்லுகிறார்கள்.