கோயம்புத்தூர்:நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'வாரிசு' திரைப்படத்தை கொண்டாடும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை விஜய் மக்கள் இயக்கத்தினர் மதுக்கரை ஒன்றிய இளைஞரணி துணைச்செயாலாளர் ரமேஷ் ஏற்பாட்டில், சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் திரையரங்கில் 'வாரிசு' படத்திற்கு பெண்களுக்கென பிரத்யேக காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
வாரிசு படத்தை கண்டு ரசித்த பெண்கள், குழந்தைகள் கோவை சாவடி பகுதியிலுள்ள கவிதா சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர் யுவராஜ், மாணவரணி தலைவர் பாபு, தொண்டரணி தலைவர் விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பிரத்யேக காட்சியைப் பார்க்க பெண்கள் ஆர்வமாக சென்றனர். திரைப்படத்தைக் காண சென்ற பெண்கள் விஜய் பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:யோகி பாபுவின் பொம்மை நாயகி ரிலீஸ் தேதி அறிவிப்பு!