தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம நிர்வாக அலுவலர் தொடர் பணிமாறுதல்: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிருப்புப் போராட்டம் - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர்: கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்ச்சியாகப் பணி மாறுதல் செய்ததை கண்டித்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

VAO
VAO

By

Published : Nov 20, 2020, 2:32 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அடுத்த கணியூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவருபவர் செல்வி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பாக முத்து கவுண்டன்புதூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவந்தார்.

அங்கு பணியில் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே அவர் கணியூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணி மாற்றம் செய்யப்பட்டார். கடந்த பத்து மாதங்களாக அங்கு பணியாற்றிவந்த நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 18) திடீரென கரவளி மாதப்பூர் கிராமத்திற்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இவர் பணி மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணத்தை கோட்டாட்சியர் தனலிங்கம் தனது உத்தரவில் தெரிவிக்காமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் இன்று (நவம்பர் 20) போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

அதன்படி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சூலூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்டம் முழுவதுமிருந்து வந்த 75-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிருப்பு போராட்டம்

மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது செல்விக்கு கரவளி மாதப்பூர் பகுதி சொந்த ஊராக இருப்பினும் அதே ஊரில் அவருக்கு விவசாய நிலங்கள் உள்ளன.

இது போன்ற விவசாய நிலங்கள் இருக்கும் அலுவலரை அதே ஊரில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க கூடாது என்ற சட்ட விதிமுறைகள் இருந்தும் அதை மீறி கோட்டாட்சியர் தனலிங்கம் செல்வியை பழிவாங்கும் விதமாக தொடர்ந்து பணி மாற்றம் செய்துவருவதாக தெரிவித்தனர்.

இந்த உத்தரவை ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் எனவும் உடனடியாகத் தீர்வு எட்டப்படவில்லை எனில் மாநில அளவில் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்கப் போவதாக தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details