கோவைஅருகே தடாகம் சாலை கணுவாய்- கே.என்.ஜி. புதூர் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில்(ஜே.எம். ஹவுசிங் வீட்டுமனை விற்பனை தொடக்க விழா) அதில் திரைப்பட நடிகையும், பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’திரைப்படப் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நம்மை விட்டுப் பிரிந்தது, மீளாத்துயரம். நான் தற்போது, ஓடிடி தளங்களில் வெப் தொடர்களில் நடித்து வருகிறேன். வெப் தொடர்கள் தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது. வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது’ என்றார்.