கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இயங்கி வரும் மணக்கடவு தனியார் வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், இளநிலை, முதுநிலையைச் சேர்ந்த 240 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ' தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மக்கள் தேவைக்கு ஏற்ப உரங்களைப் பயன்படுத்த வேண்டும். இயற்கை விவசாயம் நல்லது தான். ஆனால், சில நேரங்களில் அதிலிருந்து வரும் பூச்சிகள் மற்ற விவசாய நிலங்களுக்கும் பரவி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுகளைத் தயாரிப்பதற்கு ஒருங்கிணைந்த விவசாயம் தேவைப்படும்’ என்றார்.