கோயம்புத்தூர்:கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சமூக வலைதளத்தில் தான் நலமுடன் உள்ளதாக பதிவிட்டு உள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கரோனா தொற்று காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் காய்ச்சல் குறைந்து நலமுடன் இருப்பதாக, தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.