கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று (ஏப். 3) உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
சுமார் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவர், சிறிது நேரம் மக்களிடையே உரையாடிவிட்டு, மீண்டும் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இதில், சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.