தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக தனது கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்' - வானதி சீனிவாசன் - கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர்: திமுக தனது கட்சி தொண்டர்கள் செய்யும் அராஜக செயலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி வைக்கவேண்டுமென வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

south
south

By

Published : May 4, 2021, 10:39 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரை, கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், " கரோனா இரண்டாவது அலை மிக அதிகமாக பரவிவரும் சூழலில் தேவைப்பட கூடிய அளவு ஆக்சிஜன், தடுப்பூசி தொடர்பாக இந்த தொகுதியில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளின் உடனடி தேவை என்ன என்பதை பற்றியும் மரியாதை நிமர்த்தமாகவும் ஆட்சியரை சந்தித்தேன்.

கரோனா உதவிகள் பெறுவதற்கு மக்கள் சிரமம் படுவதாகவும், படுக்கை வசதிகள் குறித்து தெரிந்துக்கொள்ள ஒரு உதவி மையத்தை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். ஆட்சியர் அதையும் நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னையில் அம்மா உணவகம் தாக்கப்பட்ட சம்பவம் போன்று திமுகவினர் பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர்கள், இதை மனதில் வைத்துக் கொண்டு தங்களுடைய கட்சி தொண்டர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இது போன்ற செயல்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி வைக்கவேண்டும். அப்போதுதான் அரசுக்கும் மக்களுக்கும் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதி யோகித்யநாத் கோயம்புத்தூர் வந்தபோது ஏற்பட்ட சம்பவத்தில் யார் உள்ளார்கள்? கல்லெறிந்து வீசிய நபர் யார்? அந்த நபரைக் குறித்து விசாரிக்க புகார் கொடுத்தேன். ஆனால் இன்று வரைக்கும் நடவடிக்கை இல்லை. இந்த சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை பதற்றத்தை உருவாக்குவதற்காக சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளனர்” என்ரார்.

ABOUT THE AUTHOR

...view details