உள்ளாட்சித் தேர்தலுக்கான பாஜக சார்பில் போட்டியிட விரும்பவர்களுக்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. இதனைத் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தார். பல பாஜக தொண்டர்கள் ஆர்வமுடன் தங்களுடைய விருப்ப மனுக்களை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புகளையே உச்ச நீதிமன்றம் வழங்கி வருகிறது என்றும் ரஃபேல் விமான வழக்கில் காங்கிரஸ் இனிமேலாவது கற்பனைக் கதைகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.