தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பாஜக இடையே தகராறு; வானதி சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர் - சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன்

அதிமுக, பாஜக இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கில் சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை கூடுதல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

வானதி சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்
வானதி சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்

By

Published : Nov 12, 2021, 7:30 AM IST

தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், அதிமுக சார்பில் அம்மன் அர்ச்சுனனும் போட்டியிட்டனர்.

பெரியகடைவீதியில் வானதி சீனிவாசன் பிரசாரம் செய்த போது அதிமுகவை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் ஆதிநாராயணனுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து பெரியகடைவீதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் நீதிமன்றம் எண்-5 இல் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் ரகுமான், விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சிபிஎம் கட்சிப் பிரமுகர் கொலை - 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details