தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற வானதி ஸ்ரீனிவாசன் - தேசிய ஜனநாயக கூட்டணி

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

Vanathi Srinivasan met and greeted Minister SB Velumani
Vanathi Srinivasan met and greeted Minister SB Velumani

By

Published : Mar 14, 2021, 7:42 PM IST

கோவை:தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று அறிவித்தது. இதில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன், தான்கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தகவலை தெரிவித்து, அவருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை தெற்கு தொகுதியில் பாஜக வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என உறுதியளித்தார்.

அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற வானதி ஸ்ரீனிவாசன்

இந்த சந்திப்பின் போது அதிமுக, பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details