கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். மார்ச் 15ஆம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்த அவர் தற்போது பரப்புரை பயணத்தில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார். இன்று ராஜவீதி பகுதியில் உள்ள தேர்நிலைத் திடலில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் சேர்ந்து மதிய உணவருந்தி மத்திய அரசின் இன்சூரன்ஸ் குறித்து எடுத்துரைத்தார்.
அதன் பின் அப்பகுதியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட அவர், "தற்போது பாஜக அதிமுக கூட்டணியில் நான் நிற்கிறேன். இந்தத் தொகுதியில் ஒருபுறம் காங்கிரஸ் கட்சியும் மறுபுறம் கோவைக்காகப் பேசாத கோவை மக்கள், பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டை பற்றி அறியாத ஒருவர் நிற்கிறார் " என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனை சுட்டிக் காட்டினார்.