கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளான குரங்கு முடி, தாய்முடி, நல்ல முடி, பூஞ்சோலை ஆகியப் பகுதிகளில் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதையடுத்து மானாம்பள்ளி, தாய்முடி - லோயர் டிவிஷன் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை காட்டு யானைகள் அதிகாலையில் வந்து இடித்து தள்ளியுள்ளது.
காட்டு யானைகள் அட்டகாசம் - நியாய விலைக் கடை சேதம்! - Wild elephants have increased in the Thaimudi estate
கோவை: வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நியாய விலைக் கடையை இடித்து தள்ளிய காட்டு யானைகள்
இதனால் அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மானாம்பள்ளி வனத்துறையினர் கூறும்போது தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் போது கவனமுடன் இருக்குமாறு தெரிவித்தனர்.
மேலும் காட்டு யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.
இதையும் படிங்க: சென்னையில் ரவுடி கும்பல் மோதல்; நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு