கோவை மாவட்டம் வால்பாறைஅருகேயுள்ள டோனி முடி செகண்ட் டிவிஷன் பிரிவில் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்துவந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பொங்கலை முன்னிட்டு ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகிகளுடன் சுரேஷ் திருவிழா பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சுரேஷ் வீடு திரும்ப சாலையில் நடந்து வந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.