கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கல்லார் செட்டில்மெண்ட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அருகே உள்ள தெப்பக்குளம் மேடு பகுதியில் தற்காலிக குடிசை அமைத்துவந்தனர். இதனை அறிந்த வனத் துறையினர் உடனடியாக அப்பகுதியை காலிசெய்ய வேண்டும் என்று அனைவரையும் தாயமுடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் குடி அமர்த்தினர்.
முன்னதாக தமிழ்நாடு அரசு 2017ஆம் ஆண்டு மலைவாழ் மக்களுக்கு ஒன்றே முக்கால் செண்டுக்கு பட்டா தருவதாகக் கூறி காலம் தாழ்த்திவந்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியாளர், வனத் துறைக்குப் பலமுறை கோரிக்கைவைத்துள்ளனர்.