தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீகாளியம்மன் கோயில் கொடை விழாவில் அன்னதானம்! - Coimbatore District latest News

வால்பாறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோயிலில் கொடை விழாவில் கிடா வெட்டி அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Kaliamman Temple fuction
Kaliamman Temple fuction

By

Published : Dec 25, 2020, 9:55 PM IST

கோயம்புத்தூர்:வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் திருக்கோவில் திருவிழா உற்சவம் நடைபெற்றது.

வால்பாறை அடுத்த பச்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோயிலில் கொடை விழா நேற்று(டிச.24) நடைபெற்றது. நாம் கேட்கக்கூடிய வரத்தை தரக்கூடிய சிறப்புவாய்ந்த கோயில் என பக்தர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீகாளியம்மன் கொடை விழா

இந்தப் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியில் நடைபெறும். இந்த கோயிலில் தெய்வங்களின் அருள்வாக்கு, நடனங்கள் ஆடி வரம் சொல்லக்கூடிய தன்மை பெற்ற கோயிலாகும்.

இங்கு ஆண்டுதோறும் கிடா வெட்டி அன்னதானம் செய்வது வழக்கம். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்டேட் மேலாளர், தர்ம கர்த்தா பாலசுப்பிரமணியம் கந்தசாமி கலியபெருமாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பஞ்சாப் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகள் போராடவில்லை- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

ABOUT THE AUTHOR

...view details