தற்போது நிலவி வரும் கரோனா வைரஸ் பீதியால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு ஆதரவற்றவர்கள், வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உணவு இல்லாமல் அவர்கள் அவதியுறா வண்ணம் தமிழ்நாட்டில் இயங்கிவரும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் இயங்கிவரும் அம்மா உணவகத்தை வால்பாறை ஆணையாளர் பவுன்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உணவு உண்டு செல்வதால் சமைக்கும் பொருள்களை சுத்தமாக கழுவி தூய்மைப்படுத்திய பின்பு சமைக்க வேண்டும் என்று அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.