தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறையில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்! - கரோனா தொற்று

கோவை: வால்பாறையில் கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க வால்பாறை நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.

valparai-disinfecting
valparai-disinfecting

By

Published : Aug 21, 2020, 10:27 PM IST

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் வால்பாறையில் கரோனா பரவல், அதிகரித்துவருவதால் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில் முக்கிய பகுதிகளில் நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.

வால்பாறை பகுதியின் முக்கிய வீதியான காந்தி சிலை, நகராட்சி அலுவலகம், பழைய பேருந்து நிலையம், ஸ்டாண்மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி நகைக் கடை வீதி, கக்கன் காலணி ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்21) லாரி மூலம் நகராட்சி கரோனா தடுப்பு பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வால்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்குத் தொற்று பரவாமல் பாதுகாக்க முககவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


இதையும் படிங்க:கோவையில் மேலும் 395 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details