தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறை சாலையில் சுற்றித் திரிந்தவர்களுக்கு காவலர்கள் கரோனா விழிப்புணர்வு - Coimbatore Valparai Corona

கோவை: வால்பாறை சாலையில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு காவலர்கள் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி காவலர்கள்
கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி காவலர்கள்

By

Published : Mar 29, 2020, 8:48 AM IST

கோவை மாவட்டம் வால்பாறையில் கரோனா தடுப்பு நடவடிக்கையின்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களான பால், காய்கறி, மளிகை, மருந்து பொருள்கள் வாங்க மட்டும் அனுமதி உண்டு. இதனைப் பயன்படுத்தி சிலர் வால்பாறையில் அடிக்கடி சாலையில் சென்றுவருகின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்த வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் அஞ்சலகம், பழைய பேருந்து நிலையம், ஸ்டான்மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் ரோந்துப் பணியினை மேற்கொண்டனர்.

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்

அப்போது அடிக்கடி சாலையில் சென்றவர்களிடம் இனிமேலும் தேவையில்லாமல் சாலைகளில் நடமாட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்கவைத்தார். தொடர்ந்து அவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு: சென்னை காவல் துறையினரின் புதிய நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details