தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021-க்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. பின்னர் திமுக 140-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையை பெற்றது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கை மேலோங்கியே இருக்கிறது.
திமுகவுக்கு பின்னடைவை தந்த கொங்கு - முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக! - அமுல் கந்தசாமி
கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்த்த நிலையில், 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமுல் கந்தசாமி வெற்றிபெற்றுள்ளார்.
![திமுகவுக்கு பின்னடைவை தந்த கொங்கு - முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக! அமுல் கந்தசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11613975-755-11613975-1619947260989.jpg)
அமுல் கந்தசாமி
கொங்கு மண்டலத்துக்குட்பட்ட வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறுமுகம் போட்டியிட்டார். கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்த்த நிலையில், 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமுல் கந்தசாமி வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் அதிமுக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Last Updated : May 2, 2021, 3:55 PM IST