கோயம்புத்தூர்:அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் குனவதி. ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக அன்னூரில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குணவதி கருவுற்று நிறைமாத கர்ப்பினியான நிலையில் இவரது தாயை அண்மையில் இழந்தார்.
இதனால் இவருக்கு தாய் இல்லாமல் வளைகாப்பு நடக்குமா என மனச்சோர்வுடன் இருந்த நிலையில், அவரது மன வலியை போக்கும் வகையில் அவருடன் பணியாற்று சக ஊழியர்கள் ஒருங்கிணைந்து நேற்று (மார்ச் 16) அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளைகாப்பு நடத்தி அசத்தினர்.