தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 குழந்தைகள் மரணம்: கோயம்புத்தூரில் தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைப்பு - Vaccination strike in Coimbatore

கோயம்புத்தூர்: தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

tn_cbe_02_child_death_photo_script_TN10027
tn_cbe_02_child_death_photo_script_TN10027

By

Published : Feb 20, 2021, 1:53 PM IST

கோயம்புத்தூர் மசக்காளிப்பாளையம் பகுதியில் கடந்த 17ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்ட குழந்தை ஒன்று அன்றைய நாளே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. அக்குழந்தை நிமோனியாவால் உயிரிழந்ததென 18ஆம் தேதி உடற்கூராய்வு பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சவுரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டரை மாத ஆண் குழந்தையும் தடுப்பூசி போடப்பட்டு உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சவுரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்-அன்னபூரணி தம்பதியின் இரண்டரை மாத ஆண் குழந்தை வெற்றிமாறன். இக்குழந்தைக்கு கடந்த 17ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மறுநாள் (பிப். 18) இரவு உறங்கிய குழந்தை காலையில் எழவில்லை.

இதையடுத்து பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்று பார்த்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதனைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு: இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details