தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனத்துறைக்கு எதிராக வால்பாறை மலைவாழ் மக்கள் தர்ணா - கோவை மாவட்டச் செய்திகள்

கோயம்புத்தூர்: வால்பாறை அருகேயுள்ள கல்லார் செட்டில்மெண்ட் பகுதியில் மலைவாழ் மக்கள் அமைத்த தற்காலிக குடிசைகளை அகற்றக்கூறிய வனத்துறையினருக்கு எதிராக அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

trible issue valpari  வால்பாறை செய்திகள்  கல்லார் செட்டில்மண்ட்  கோவை மாவட்டச் செய்திகள்  covai lattest news
வனத்துறைக்கு எதிராக கிளர்ந்த வால்பாறை மலைவாழ் மக்கள்

By

Published : Aug 15, 2020, 7:09 PM IST

வால்பாறை பகுதியில் கல்லார், நல்லமுடி உள்ளிட்ட 18 மலைவாழ் கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்துவருகின்றனர். தற்போது அப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக சிறிய நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

ராஜமலை எஸ்டேட் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு போல் தங்கள் பகுதிகளில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறி கல்லார் பகுதி மக்கள் இருப்பிடங்களை காலி செய்து தெப்பக்குளம் மேடு பகுதிகளில் தற்காலிக குடிசை அமைத்துள்ளனர். இதற்கு வனத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக குடிசையை அகற்ற வலியுறுத்தியுள்ளனர்.

வனத்துறைக்கு எதிராக கிளர்ந்த வால்பாறை மலைவாழ் மக்கள்

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இன்று (ஆகஸ்ட் 15) காலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:கரோனா வார்டில் நோயாளிகள் நடனம்!

ABOUT THE AUTHOR

...view details