தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தினந்தோறும் ஒரு லட்சம் பேர் வரை பிஎஃப் நிதியைத் திரும்பப் பெற விண்ணப்பம்! - தினந்தோறும் ஒரு லட்சம் பேர் வரை பிஎஃப் நிதியை திரும்ப பெற விண்ணப்பம்

தினந்தோறும் 1 லட்சம் பேர் வரை பிஎஃப் நிதியைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கிறார்கள் என மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் நீலம் ஷமி ராவ் தெரிவித்துள்ளார்.

நீலம் ஷமி ராவ் பேட்டி
நீலம் ஷமி ராவ் பேட்டி

By

Published : Feb 24, 2022, 8:38 PM IST

கோயம்புத்தூர்: தனியார் விடுதி கூட்டரங்கில் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணைய ஆணையாளர் நீலம் ஷமி ராவ் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், கோவைக்குட்பட்ட 13 மாவட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை முன்வைத்தனர்.

நீலம் ஷமி ராவ் பேட்டி

பயனுள்ள ஆலோசனை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீலம் ஷமி ராவ், "இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்வைத்த நிலையில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து பயனுள்ள ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

சாதாரண பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியின் பலன்கள் கிடைப்பது தொடர்பாகவும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்குப் பயன் ஏற்படும்.

இணையதளப் பிரச்னை

நாடு முழுவதும் கரோனா காலத்தில் 72 லட்சம் பேர் வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். தினம்தோறும் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் இணையதள வேகம் குறைந்து பிரச்னை ஏற்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க:சிறையில் கொசுக்கடி: மன உளைச்சலில் மாத்திரை எடுக்க மறுத்த ஜெயக்குமார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details