கோவை கார் வெடிப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் ஆர்.தங்கவேலு விடுத்துள்ள அறிக்கையில், 'கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்புச்சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலியானவரின் பின்னணியும், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் குறித்த தகவல்களும் பீதியூட்டும் வகையில் உள்ளன.
இதில் காவல் துறையினரின் விரைவான செயல்பாடுகளும், 5 பேரைக் கைது செய்துள்ளதும் பாராட்டுக்குரியவை. அதேசமயம், முழு சதியையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னணியில் வெளிநாட்டுத் தீவிரவாத கும்பல் இருக்கிறதா என்றும் தீர விசாரிக்க வேண்டும்.