தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் முன் பன்றி இறைச்சி வீசியவர் கைது! - கோவில் முன்பு அடையாளம் தெரியாத நபர் இறைச்சி வீச்சு

கோவை: கோயிலின் முன் பன்றி இறைச்சி வீசிய ஹரி என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயில் முன் பன்றி கறி வீசிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
கோயில் முன் பன்றி கறி வீசிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

By

Published : May 29, 2020, 3:04 PM IST

Updated : May 30, 2020, 6:52 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சலீவன் வீதியிலுள்ள வேணுகோபால சுவாமி கோயில், அதன் அருகில் அமைந்திருக்கும ராகவேந்திரா சுவாமி கோவிலின் முன்பும் அடையாளம் தெரியாத நபர்கள் பன்றி இறைச்சியை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனைக் கோயிலின் அருகிலுள்ள நபர்கள் கண்டதும் வெரைட்டி ஹால் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்துவந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலாஜி சரவணனும் வந்து ஆய்வுமேற்கொண்டார். இதனிடையே அங்கு திரண்ட இந்து அமைப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பின்னர் இரண்டு கோயில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினர், ஹரி என்பவரை கைது செய்தனர். அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பசி பொறுக்காமல் கீரை விற்கச் செல்கிறோம்... கலங்கும் சமையல் தொழிலாளிகள்!

Last Updated : May 30, 2020, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details