தமிழ்நாடு

tamil nadu

‘ஜவுளித்துறை நகரமாக விளங்குகிறது கோவை’ - மத்திய இணை அமைச்சர் புகழாரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 9:36 PM IST

மத்திய ரயில்வேத்துறை இனை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் வடகோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

coimbatore-is-emerging-as-a-textile-city-union-minister
மத்திய இணை அமைச்சர் ஆய்வு

கோயம்புத்தூர்:மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சரான தர்ஷனா ஜர்தோஸ், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் வடகோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரயில்வே பயணிகள் சங்கத்தினர் மற்றும் தொழில் துறையினர் ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய இணை அமைச்சரிடம் அளித்தனர்.

இதனையடுத்து இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “வடக்கு ரயில் நிலையத்தை பார்வையிட மத்திய இணை அமைச்சர் கேட்டுக்கொண்டதை அடுத்து வந்துள்ளார். 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்ரித் திட்டத்தில் புதிய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகள் மற்றும் தொழில் அமைப்பினர் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர். பயணிகளுக்கும், சரக்கு பொருள்கள் எடுத்துச் செல்வதற்கும் இந்த ரயில் நிலையம் முக்கியம் பங்கு வகிக்கிறது.

உலக தரத்தில் கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஜவுளித்துறை நிகழ்விற்காக வந்திருந்த இணை அமைச்சரை என்னுடைய தொகுதி எனக்கூறி அவரை அழைத்து வந்து கோரிக்கைகளை பெற செய்துள்ளேன். ரக்‌ஷா பந்தன் பரிசாக இத்தனை ஆண்டுகள் இல்லாத நிலையில் 11 கோடி ரூபாய் பிரதமர் வழங்கியுள்ளார். இதனை நமக்கான பரிசாக வைத்துக் கொள்ள வேண்டும். பாரத பிரதமர் மேற்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை உலக தரத்தில் மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

ஜவுளிதுறை நகரமாக விளங்குகிறது கோவை: பின்னர் மத்திய இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் ஹிந்தியில் பேச, வானதி சீனிவாசன் மொழி பெயர்த்தார், "ரயில்வே துறையில் வளர்ச்சிக்கு பிரதமர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். நாட்டில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையங்களை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜவுளிதுறையில் முக்கிய நகரமாக கோவை விளங்குகிறது. நாடு முழுவதும் ஏற்றுமதி பொருட்களை கொண்டு செல்ல ரயில் சேவை முக்கியமாக உள்ளது. நகரத்தை ஒட்டியுள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தினால் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும். ரயில் சேவை உயர்த்தும் போது சுற்றுலா துறையும் வளர்ச்சி அடையும்.வந்தே பாரத் இரயில் சேவையானது முக்கிய நகரங்களை இணைத்துள்ளது.

அம்ரித் திட்டத்தில் கோவை வடக்கு ரயில் நிலையம் தேர்வாகி பணிகள் நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் ரயில்வே துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளார். ஒருங்கிணைத்த வளர்ச்சியை பிரதமர் விரும்புகிறார். அதன் அடிப்படையிலயே அம்ரித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:செப்.18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details