கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் அருகேயுள்ள செட்யக்காபாளையத்தில், டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மகேந்திரன்(வயது 28) என்பவர் விற்பனை மேலாளராக இருந்து வருகிறார்.
இவர், நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்த பின் கடையை மூடும் நேரத்தில், மர்ம நபர்கள் மூன்று பேர் கடையினுள் புகுந்துள்ளனர். திடீரென உள்ளே நுழைந்த அவர்கள் மகேந்திரனை கத்தியால் தாக்கி உள்ளனர்.
பின்னர் அங்கிருந்த பணத்தை கொள்ளை செய்யவும் முயற்சி செய்தனர். இதைக்கண்ட, மகந்திரன் கூச்சல் போட்டத்தால், டாஸ்மாக் கடையின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்தவர்கள் கடைக்கு வந்துள்ளனர்.
இதனால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.