தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவு தரக்குறைவாக உள்ளது என்று கூறியவர் மீது காவல்துறையில் புகார்! - covai latest news in tamil

கோவை:உணவு தரக்குறைவாக உள்ளது என்று கடைக்காரரிடம் கூறிய பெண்ணின் மீது கடைக்காரர் காவல்துறையில் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார்.

unhygienic food issue Anaikatti female give complain in Coimbatore commissioner

By

Published : Oct 9, 2019, 7:55 AM IST

கோவை ஆனைக்கட்டியை அடுத்துள்ள ஜம்புகண்டியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வரும் இவர், நான்கு நாட்களுக்கு முன்பு அங்குள்ள பெட்டிக்கடையில் வாங்கிய சிற்றுண்டி கெட்டுப்போயிருந்தது குறித்து கடையின் உரிமையாளரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.

இவ்வாறு தரமற்ற உணவினை வழங்கினால் உங்கள் மீது புகார் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதன்பின்பு அமைதியான அந்தக்கடைக்காரர் அடுத்த மூன்று நாட்களுக்கு கடையை திறக்கவில்லை.

இந்நிலையில் நேற்று கடைக்காரர் ஜெயந்தி மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், சிற்றுண்டி கெட்டுப்போயிருந்தது குறித்து ஜெயந்தி என்னிடம் கூறி பணம் கேட்டதாகவும், பணம் தரவில்லை என்றால் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

உணவு தரக்குறைவாக உள்ளது எனக்கூறிய ஜெயந்தி

இது குறித்து பேசிய ஜெயந்தி, " செய்யாத குற்றத்திற்கு பொய் வழக்கு போட்டிருக்கும் காவல்துறையினர் மீதும் அந்த பெட்டிக்கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளேன். இந்த புகாரினால் நான் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளேன் '' என்றார்.

இதையும் படிங்க :தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இசைப் பள்ளி திருச்சியில் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details