தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே போதையில் கேரள இளைஞர்கள் அட்டகாசம்! - பொள்ளாச்சி

கோவை: பொள்ளாச்சி அருகே கேளிக்கை விடுதி ஒன்றில், மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்தி அட்டகாசம் செய்த 162 கேரள இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அனுமதியின்றி செயல்பட்டுவந்த விடுதி

By

Published : May 5, 2019, 5:03 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை பகுதியில் தனியார் தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி செயல்பட்ட கேளிக்கை விடுதியில், நேற்றுமுன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதையில் அட்டகாசம் செய்துள்ளனர்.

இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ஆனைமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் போதையில் இருந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அங்கிருந்த பெரும்பாலானோர் கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் குழுவாக செயல்படும் அவர்கள் சேத்துமடை பகுதியில் 'போதை விருந்து' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அங்கு வந்து மது, கஞ்சா, போதை மருந்துகள் உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்தி அட்டகாசம் செய்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான குழு அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில் அங்கிருந்த 162 இளைஞர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

அனுமதியின்றி செய்ல்பட்டு வந்த விடுதிக்கு சீல் வைக்கும் அரசு அலுவலர்கள்

மேலும், எந்த அனுமதியின்றி அங்கு செயல்பட்டு வந்த கேளிக்கை விடுதி உரிமையாளர் கணேஷ் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, அனுமதியின்றி செயல்பட்டு வந்த கேளிக்கை விடுதியை மூடி சீல் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, அங்கு சென்ற ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்சலம் அந்த கேளிக்கை விடுதியின் உள்ள ஏழு அறைகளுக்கு சீல் வைத்தார்.

சமீப நாட்களாக பெண்களுக்கு பாலியல் தொல்லை, கல்லூரி மாணவர் கொலை உள்ளிட்ட சம்பவங்களால் பொள்ளாச்சியின் நற்பெயர் தொடர்ந்து அசிங்கப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details